● முகப்பு
● வரலாறு
● விஷேட அறிவித்தல்
● அவதரப் போட்டி
● பூஜை நேரம்
● பொன்மொழிகள்
● வழிபாடு
● அவதாரம்
● நிழல்கள்
● அன்புக் கரங்கள்
● அற்புதங்கள்
● ஒளி நாடா
● நேரடி வீடியோ (Denmark)
● நேரடி வீடியோ (Sri Lanka)
● நேரடி வீடியோ (Swiss)
● நேரடி வீடியோ (Canada)
● இசைத் தட்டுகள்
● வரும் வழி
● ஆன்மிகக் கட்டுரைகள்
● சேவை
● தொடர்புகளுக்கு
டென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலயம்

அன்பார்ந்த அடியார்களே!

அபிராமி உபாசகி அம்மையாரின் பக்தர்கள் எல்லோரும் வருத்தங்கள், துன்பங்கள் தாங்க முடியாத துயரங்கள், பல சுமைகள், குடும்பபிரச்சனைகள் போன்றவற்றுடன் வருகின்றீர்கள், (அடியார்களே இவ்ஆலயத்திற்க்கு புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மச்சம் மாமிசங்களை அளையாது உண்ணாது சுத்தமாக இருந்து வாருங்கள்) இவைகள் உங்களை விட்டு நீங்குவதற்கு இவ்ஆலயத்தில் இருக்கும் தொண்டர்களிடம் இலக்கங்களை பெற்று பொறுமையுடன் இருந்து வரிசைக்கிரமமாக உபாசகி அம்மையார் அழைக்கும் போது சென்று மனம்விட்டு உங்கள் பிரச்சனைகளை கூறி சுமைகளை அம்மையாரின் பாதத்தில் இறக்கி வையுங்கள் அம்மையார் அதற்குரிய பரிகாரத்தை கூறுவார்.

குறிப்பு: வருத்தங்கள், துன்பங்கள், துயரங்கள், சுமைகள், குடும்பபிரச்சனைகள் போன்றவை நீங்குவதற்கு இவ்ஆலயத்தில் உபாசகி அம்மையாரின் திருவுருவப்படம், திருவடிப்படம், தேசிக்காய், காவல்தகடு, அச்சரக்கூடு, காவல்நூல், உபாசகி அம்மையாரின் திருவுருவப்பௌவுன்பென்டன்;, வெள்ளிப்பென்டன், ஜம்பொன்காப்பு, நவரத்தினமாலை, பத்திராக்கமாலை போன்றவைகள் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலயத்தில் உள்ளது, இவைகளை ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரின் திருக்கரத்தால் பெற்று அம்பாளின் திருவருளைப் பெற்றுய்யுங்கள்.

தேசிக்காய்: (அதன்மகிமை): பச்சை தேசிக்காய் ஸ்ரீ அபிராமி உபாசகிஅம்மையாரின் திருக்கரத்தால் வாங்குங்கள். அம்பாளின் தேசிக்காய் உங்கள் பிணி, பீடைகளை நீக்கும், உங்கள் உடலில் எங்கெங்கு நோய் வலிகள் வருத்தங்கள் இருக்கின்றதோ அந்த இடங்களில் வைத்து மெதுவாக பிடித்து உருட்டும்போது சுகமடையும். எங்கு செல்வதானாலும், ஏதாவது நல்ல காரியங்களை செய்ய போவதானாலும் அம்பாளின் தேசிக்காயுடன் போங்கள் எதுவித தடங்கலும் இல்லாது தீயசக்திகளில் இருந்து உங்களை காப்பாற்றி நல்வழியில் கொண்டு செல்லும். அத்துடன் தெய்வத்தாயின் தேசிக்காயை வீட்டுவாசலில் உள்பக்கமாக மேலே வலது பக்கத்தில் கட்டவும். உங்கள் வீட்டிற்கும் வீட்டில் இருப்போருக்கும் காவலாக இருக்கும்.

காவல் தகடு: அம்பாளின் திருக்கரத்தால் தரப்படும் இக்காவல்தகட்டை உங்கள் வீட்டின் உள்புறமாக நான்கு மூலைகளிலும் வையுங்கள், வீட்டில் உள்ள தீயசக்திகள், பிணிகள் பீடைகள் நீங்கும், கெட்ட எண்ணங்களுடன் வருபவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்றும் . இதேபோல் பேசிற்குள் வைக்கும் காவல் தகடும் உண்டு இதனையும் அம்மாவின் திருக்கரத்தினால் வாங்கி பேசிற்குள் வைத்து கொள்ளுங்கள், போகும் இடமெல்லாம் கொண்டு செல்லுங்கள், அக்காவல் தகடு உங்களுக்கு துணையாக இருந்து நன்மைகளை செய்யும், தீயவைகள் உங்களை நாடாது தடுத்து பாதுகாப்பை கொடுத்து நல்வழியில் கொண்டு செல்லும்.

காவல்படம்: ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரின் தீருவுருவகாவல்படம், திருவடிப்படம் போன்றவையும் உண்டு இவைகளை உபாசகி அம்மையாரின் திருக்கரங்களினால் வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து காலையில் ஒரு டம்ளர் பால் காய்ச்சி வைத்து பூஜித்து வாருங்கள், ஊபாசகி அம்மையார் உங்கள் வீட்டிற்கும் உங்களுக்கும் காவலாக இருந்து பற்பல நன்மைகளை செய்வார். அச்சரக்கூடு, காவல் நூல், அம்மையாரின் திருவுருவப்பவுன்பென்டன், வெள்ளிப்பென்டன், ஐம்பொன்காப்பு, நவரத்தினமாலை, பத்திராட்சமாலை: போன்றவைகளையும் வாங்கி ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரின் திருக்கரத்தினாலே உங்கள் கழுத்திலோ அல்லது கையிலோ அணிந்து கொள்ளுங்கள், தங்களை பீடித்துள்ள நோய்கள், பிணி, பீடைகள் துன்பங்கள் தீயசக்திகள் போன்றவைகள் நீங்கி மனநிம்மதியுடனும் உற்சாகத்துடனும் துணிவுடனும் நல் வாழ்வு வாழ்வீர்கள். கலியுகத்தில் தான்தோன்றி அம்மனாக, நடமாடும் கலியுக தெய்வமாக அவதரித்த ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரில் முழு நம்பிக்கை வையுங்கள், நாள் தோறும் பூஜித்து வணங்குங்கள் உங்கள் இல்லம் செழிப்புறும், உங்கள் வாழ்வு மலரும்.

வணக்க