● முகப்பு
● வரலாறு
● விஷேட அறிவித்தல்
● அவதரப் போட்டி
● பூஜை நேரம்
● பொன்மொழிகள்
● வழிபாடு
● அவதாரம்
● நிழல்கள்
● அன்புக் கரங்கள்
● அற்புதங்கள்
● ஒளி நாடா
● நேரடி வீடியோ (Denmark)
● நேரடி வீடியோ (Sri Lanka)
● நேரடி வீடியோ (Swiss)
● நேரடி வீடியோ (Canada)
● இசைத் தட்டுகள்
● வரும் வழி
● ஆன்மிகக் கட்டுரைகள்
● சேவை
● தொடர்புகளுக்கு
ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரின் அவராத விழா
அபிராமி அம்மன் ஆயிரம் அவதார வடிவங்களை கொண்டவள். அபிராமி அம்மனால் ஆட் கொள்ளப்பட்ட மாதாஜி ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மா ஜரோப்பிய கண்டத்தில் டென்மார்க் நகரில் பிராண்டாபதி என்னும் கிராம புண்ணிய பூமியில் பாதம் பதித்து பல அவதார காட்சிகள் மூலம் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வருகின்றார். மாதாஜி ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையார் 1998 ஆண்டு முதல் 2006 வரை ஒவ்வோர் மார்கழி மாத 31ம் திகதிளில் தனது பூர்வ ஜென்ம தொடர்புகளை களைந்து பார்வதி, காளி, துர்க்கை, கருமாரி, கன்னகை, நாகம்பாள், முத்துமாரி, மீனாட்சி, விஷாலாட்சி போன்ற அவதாரங்களை எடுத்து பக்தர்களின் பாவங்கள், கருமவினைகள், பிணிகள், நோய்கள், துன்பங்கள் போன்றவைகளை களைந்து அருள்பாலித்துக் கொண்டு இருக்கின்றார். இவ்விழாவிற்கு உலகில் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
அவதாரவிழாவையொட்டி மார்கழி 28ம் தகதி முதல் 30ம் தகதி வரை ஆறுகால அபிஷேக பூஜைகள் விஷேடமாக நடை பெறும் அவ்விஷேட பூஜைகளில் கலந்து சிறப்பிக்க விரும்பும் அடியார்கள் ஆலயத்தினருடன் தொடர்பு கொண்டு பூஜையில் கலந்து கொள்ளலாம்.

இவ் அவதார விழா மார்கழி 31ம்திகதி மாலை 05.00 மணியளவில் ஆரம்பிக்கும், மங்கள வாத்தியங்களுடன் மூல விக்கிரகங்களுக்கு அபிஷேக அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெறும்;. இவ்;வேளை மங்கள வாத்தியங்கள், பஜனைகள், சங்கீத இசைக்கச்சேரிகள் போன்றவைகள் நடைபெறும். மாதாஜி உபாசகி அம்மையார் அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும் இரவு 11.30 மணியளில் தனது இருப்பிடத்திற்கு சென்று கண்களை மூடி நிஸ்டையில் அமர்ந்து சுயநினைவை இழந்து அபிராமி அம்மனிடம் ஒன்றறக் கலந்து விடுவார், இவ்வேளை பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ தீராதநோய், பிணிகள,; தீயவினைகள், துன்பங்கள், போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாதாஜியின் முன்னால் அமர்ந்து இருப்பார்கள். பக்தர்கள் ஓம்நமசிவாய எனும் நாமத்தை கோஷத்துடன் உரக்க உச்சரித்துக்கு கொண்டு இருப்பார்கள், சரியாக நள்ளிரவு 12.00மணியளவில் புது வருடம் பிறக்கும் வேளை மாதாஜி உபாசகி அம்மா தனது பூர்வஜென்ம தொடர்புகளை களைந்து அபிராமி அம்பாளினால் அருள் பாலிக்கப்பட்டு அம்மனின் ஆயிரம் அவதாரத்தில் ஒரு அவதாரம் எடுப்பார், அவ்வேளை மாதாஜி உபாசகி அம்மா தனது இரண்டு கைகளையும் உயர்த்தி அம்மன் போல் காட்சி கொடுத்து அவர் முன்னால் அமர்ந்திருக்கும் பக்தர்களின் மீது தனது அருட்பார்வையை செலுத்தி அவர்களை பீடித்திருந்த கருமவினைகளை களைந்து அருள்பாலிப்பார். அதன்பின் ஜயா அவர்கள் மாதாஜி உபாசகி அம்மாவிற்கு பால் குங்கும அபிஷேகங்கள் செய்ய பெண் தொண்டர்கள் அலங்காரம் செய்து தலையில் கிரீடம் அணிந்து அதிகாலை 01.00 மணியளவில் மாதாஜி உபாசகி அம்மாவிற்கு விஷேட தீபாராதனைகள் காட்டி சிறிய இரதத்தில் இருத்தி மங்கள வாத்தியங்களுடன் உள்வீதி உலா வலம் அழைத்து வருவார்கள், இரதம் இருப்பிடம் வந்தடைந்ததும் பெண் தொண்டர்கள் மாதாஜியை இரதத்தை விட்டு இறக்கி இருப்பிடத்தில் இருத்தி விடுவார்கள். அதைத் தொடர்ந்து மாதாஜி உபாசகி அம்மையார் தனது திருக்கரத்தினால் பக்தர்களுக்கு அவதார காப்பை கையில் கட்டி விபூதி பிரசாதமும், கைவிஷேசமும் கொடுத்து அருள்பாலிப்பார்.


அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் தை 1ம் திகதி முதல் 3ம் திகதி வரை நண்பகல் 12.00 மணியளவில் மாதாஜி உபாசகி அம்மாவிற்கு பால் குங்கும அபிஷேக ஆராதனைகளுடன் விஷேட தீபாராதனைகள் நடை பெறும். அந்த மூன்று நாட்களும் அம்மனாகவே இருந்து தீராதநோய் தீயவினைகள் போன்றவற்றுடன் தன்னை நாடி வருபவர்களுக்கு அம்மாவின் சக்தி வாய்ந்த வேப்பம் இலை, விபூதி போன்றவற்றால் அவர்களின் மேனியில் தடவி வினைகளை களைந்து விடுவார். அத்துடன் பல கலை நிகழ்ச்சிகளும் நடை பெறும்.

இப்;பிரதியை படிக்கும் ஒவ்வோர் பக்தரும் முழு நம்பிக்கை வைத்து டென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலயம் அமைந்து இருக்கும் புண்ணிய தல பூமியில் கால் வைத்து பாருங்கள் பெரும் பாக்கியம் கிடைத்தவர்களாகி விடுவீர்கள். பக்தர்களே! முழு மனதுடன் நம்பிக்கை வையுங்கள், மாதாஜி உபாசகி அம்மாவை வணங்கி வாருங்கள், நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். ஆண்டு தோறும் நடக்கும் மாதாஜி ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மாவின் அவதார விழாவிற்கு சமூகம் அளித்து உங்கள் பிணி பீடை நோய்கள் தீயவினைகள் போன்றவற்றை நீக்கி அருள் பெறுங்கள்.

(கன்னகை அவதாரம்)
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்த